தமாகா தேர்தல் அறிக்கையில் பக்கங்களைக் காணவில்லை

தமாகா தேர்தல் அறிக்கையில் பக்கங்களைக் காணவில்லை

1 mins read
b24f175c-f7ab-4ccd-a934-f97c7405e11f
-

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வௌயிட்டபோது, நடுவில் கொஞ்சம் பக்கங்களைக் காணவில்லை. தேனாம்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையின் நகல் செய்தியாளர்களுக்கு வழங்கப் பட்டது. அதில் இரண்டு பக்கங் களைக் காணவில்லை. இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "ஆமாம் உண்மைதான். அவசர, அவசரமாக அச்சிடப் பட்டது. நேற்று இரவுதான் அப்பணி முடிந்தது. காணாத பக்கங்களை அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக் கிறோம்," என்றார் வாசன். தமாகா தேர்தல் அறிக்கையில் விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.