கரூர்: கரூரில் அதிமுக பிரமுகரான அன்புநாதன் வீட்டில் 500 கோடி ரூபாய் பதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பணம் பிரித்துப் பல்வேறு தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதனால் எந்தெந்த தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கிய இடத்தில் கண்காணிப்புக் காணொளிக் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது. பணம் பிரித்து அனுப்பப்படும் காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி உள்ளதாகத் தெரிகிறது.
காணொளிக் கருவியில் பதிவான காட்சிகளை அழிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. உயர் அதிகாரிகள் நெருக்கடி யால் கரூரில் உள்ள அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். அமைச்சர்கள் இருவர் அன்புநாதன் வீட்டுக்கு வந்து சென்றது கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்லப்பட வேண்டிய இடத்தைப் பற்றியும் அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள் இருவரும் அன்புநாதனுடன் உரையாடும் காணொளிக் கருவியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

