திருப்பூர்: தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை வேட்டையாடி வருகிறது காவல்துறை. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற அதிரடி ஆய்வின்போது ஒரே நாளில் 8 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் திருப்பூரிலும் ஒரு போலி மருத்துவர் கைதாகியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஜபார் என்ற 40 வயதான அந்நபர், 'நியோ மருத்துவ மையம்' என்ற பெயரில் பலருக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தார். விசாரணையில் அவர் எந்தவித மருத்துவக் கல்வியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.
தொடரும் போலி மருத்துவர்கள் கைது நடவடிக்கை; திருப்பூரில் ஒருவர் கைது
1 mins read

