புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் 2ஆம் கட்ட வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடர் நேற்று தொடங் கியது. தொடங்கிய முதல் நாளிலேயே உத்தரகாண்ட் விவ காரத்தால் ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது. உத்தரகாண்டில் அதிபராட்சி அமுல்படுத்தப்பட்டதைக் கண் டித்து சபாநாயகர் இருக்கை முன்பு வந்து கோஷமிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், "சட்டத்தை மத்திய அரசு படுகொலை செய்வ துடன், சதி செய்து மாநில அரசு களையும் கவிழ்க்கிறது," என்றனர்.
காங்கிரசுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது. ராஜ்யசபா நேற்று கூடியதும் அவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், உத்தரகாண்ட் மாநில விவகாரத்தைக் கிளப்ப, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டனர். "ஜனநாயகத்தை கொல்லாதே, சர்வாதிகார ஆட்சி நடத்தாதே," என சபாநாயகர் இருக்கை முன்பு வந்து முழங்கினர். லோக்சபாவில் அமைச்சர் பண் டாரு தத்தாத்ரேயா பேசும்போது குறுக்கிட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே பாஜக கட்சியினர் புடைசூழ செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "அவை சுமூகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார். படம்: ராய்ட்டர்ஸ்

