4.5 லட்சம் பேரிடம் மனு பெற்ற திமுக: கனிமொழி தகவல்

4.5 லட்சம் பேரிடம் மனு பெற்ற திமுக: கனிமொழி தகவல்

1 mins read

காஞ்சிபுரம்: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது பலதரப்பு மக்களையும் சந்தித்து திமுகவினர் குறைகளைக் கேட்டறிந்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார். காஞ்சியில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட அவர், மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் திமுக மனுக்களை பெற்றுள்ளதாகக் கூறினார். "பொதுமக்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். எனவே அது திமுகவின் தேர்தல் அறிக்கை இல்லை. மக்களின் தேர்தல் அறிக்கை," என்றார் கனிமொழி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியால் மட்டுமே மீண்டும் நல்லாட்சியை வழங்க முடியும் என்றும், மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார்.