பணம் கொடுக்க உதவும் அலுவலர்கள்: பாஜக குற்றச்சாட்டு

பணம் கொடுக்க உதவும் அலுவலர்கள்: பாஜக குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலர்கள் சிலர் உதவி செய்வதாக பாஜக பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "திமுக, அதிமுக கட்சிகளுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி பாஜக. தமிழகத்தில் மாற்று அரசியல் கலாச்சாரத்தை பாஜக கொண்டுவரும். "இந்த தேர்தலில் வாக்குகளுக்கு பணம் கொடுக்க தேர்தல் ஆணையத்தில் உள்ள அலுவலர்கள் சிலரும் உதவி செய்கின்றனர். ஓட்டுக்கு பணம் தரும்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் தேர்தலில் பணம் தந்தவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்," என்றார் இல.கணேசன்.