மதுரையில் பதவியேற்பு விழா: மே 19ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பு; விஜயகாந்த் நம்பிக்கை

மதுரையில் பதவியேற்பு விழா: மே 19ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பு; விஜயகாந்த் நம்பிக்கை

1 mins read
65c5ea51-551b-43a9-9742-740f4136b762
-

மதுரையில் பதவியேற்பு விழா: மே 19ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பு; விஜயகாந்த் நம்பிக்கை மதுரை: தேர்தலுக்குப் பின்னர் தாம் முதல்வராகப் பதவியேற்கப் போவது உறுதி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார். மதுரையில் பிரசாரம் மேற் கொண்ட அவர், தொண்டர்கள் அமைதியாக தனது பேச்சைக் கேட்க வேண்டும் என்றும், சத்தம் எழுப்பினால் தமக்கு கோபம் வரும் என்றும் கூறினார். "ஜெயலலிதாவும், கருணாநிதி யும் ஒன்றுதான். கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா. சேலை கட்டின கருணாநிதி என ஜெயலலிதாவைக் கூறலாம். இரு வருமே ஒரே மாதிரிதான் யோசிப் பார்கள். மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். அதனால் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன்," என்றார் விஜயகாந்த். இதையடுத்து தனது கை விரல்களைக் கொண்டு 17, 18, 19 என்று எண்ணியவர், வரும் மே 19ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் அதற்கான விழா மதுரையில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

பிரசாரக் கூட்டம் ஒன்றில் உற்சாகமாக விஜயகாந்த். படம்: ஊடகம்