அடுத்த ஆண்டிலிருந்து இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைபேசிகளிலும் அபாய அழைப்புப் பொத்தான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவில் பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் ஒரே அபாய அழைப்புப் பொத்தானை அழுத்துவதன் மூலம் அவசர சேவைகளை அழைக்க முடியும் என்று இந்திய தொலைத் தொடர்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார். 2017 ஜனவரி 1 முதல் இத்தகைய வசதி இல்லாத கைபேசியை விற்க முடியாது என்று பெயர் தெரிவிக்காத அந்த அதிகாரி சொன்னார்.
இந்தியக் கைபேசிகளில் அபாய அழைப்பு பொத்தான்
1 mins read

