கனிமொழி: அதிமுக ஆட்சியில் ஆண்களுக்கு கூட பாதுகாப்பில்லை

கனிமொழி: அதிமுக ஆட்சியில் ஆண்களுக்கு கூட பாதுகாப்பில்லை

1 mins read
0edb88e0-89dc-428c-ab45-005273b69c10
-

சென்னை: அதிமுக ஆட்சியில் ஆண்கள் கூட பத்திரமாக வீடு திரும்ப முடியவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பேருந்து, பால், மின் கட்டணங்களை உயர்த்தியதுதான் வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா செய்த நன்றிக்கடன் என்றார்.

"கடந்த தேர்தலின்போது ஜெயலலிதா உங்களைப் பார்த்து 'செய்வீர்களா செய்வீர்களா?' என்று கேட்டதும் நீங்களும் செய்தீர்கள். பதிலுக்கு அவர் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. சென் னையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, மக்கள் பாதிக்கப்பட்ட போது வந்து பார்த்தாரா அவர்? ஆண்களால் கூட பத்திரமாக வீடு திரும்பமுடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது," என்றார் கனிமொழி.