பறக்கும் படை பெயரில் மோசடி

பறக்கும் படை பெயரில் மோசடி

1 mins read

செஞ்சி அருகே உள்ள அவலூர்பேட்டையைச் சேர்ந்த 40 வயதான சீனிவாசன் என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களை தேர்தல் பறக்கும் படை என அறிமுகப் படுத்திக் கொண்டு, வீட்டை சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் குற்றம்சாட்டியதால், சோதனைக்கு ஒப்புக் கொண்டார் சீனிவாசன். இதையடுத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வருமாறு அவர்கள் கூறிச் சென்றனர். அவலூர்பேட்டை காவல் நிலையம் சென்றபோதே அந்த 7 பேரும் போலி அதிகாரிகள் என்பது தெரியவந்தது.