பெரம்பலூர்: அதிமுகவுக்கு விமோசனமே கிடையாது என்றார் பிரேமலதா விஜயகாந்த். பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக மக்களால் சாபம் பெற்ற கட்சி என்றார். "பிரசாரக் கூட்டங்களில் பேசும் ஜெயலலிதா, 'உங்களுக்காகவே நான், உங்களால் நான்' என்கிறார். பிறகு ஏன் தொண்டர்களை வெயிலில் அமர வைத்து, வருத்தி சாகடிக்கிறார். தொகுதி மக்களை சந்திக்காத அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிப் பக்கம் வாக்கு கேட்டு வந்தால், ஓட ஓட விரட்டுங்கள். பாவம் செய்தால் கூட விமோசனம் உண்டு, சாபம் பெற்றவர்களுக்கு விமோசனம் கிடையாது," என்றார் பிரேமலதா.
பிரேமலதா: ஓட ஓட விரட்டுங்கள்
1 mins read
-

