திருமணத்தில் குறிதவறி மணமகனைத் துளைத்தது துப்பாக்கிக் குண்டு

திருமணத்தில் குறிதவறி மணமகனைத் துளைத்தது துப்பாக்கிக் குண்டு

1 mins read

ஹிசார்: ஹரியானாவில் திருமண வரவேற்பு விழாவில் கொண்டாட்டத்தை கலகலப்பூட்ட நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மணமகன் படுகாயமடைந்தார். ஹிசார் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகனுடன் அவரது நண்பர்களும் உறவினர் களும் கொண்டாட்டத் தில் ஈடுபட்டபோது, மகிழ்ச்சி வெள்ளத் தில் மிதந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மணமகன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த மணமகன் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். "காயமடைந்த மணமகனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று மன்டீப் சிங் என்ற போலிஸ் அதிகாரி கூறினார்.