சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்முறை இத்தொகுதியில்தான் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் களமிறங்குகிறார். திமுக சார்பில் அவரை எதிர்த்து சிம்லா முத்துசோழன், மக்கள் நலக் கூட்டணி சார்பில் வசந்தி தேவி, பாமக வேட்பாளர் ஆக்னஸ், பாஜக வேட்பாளர் எம்.என்.ராஜன், நாம் தமிழர் சார்பில் திருநங்கை தேவி ஆகியோர் மனுதாக்கல் செய்து உள்ளனர். டிராபிக் ராமசாமியின் மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் புவனேஸ்வரி என்பவரும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் விறுவிறுப்பாக பிரசாரம் நடக்கிறது.
ஆர்.கே.நகர்: 60 பேர் மனுத்தாக்கல்
1 mins read
-

