விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா வழியாக திருப்பதிக்கு இரண்டடுக்கு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் இந்த ரயில் விடப்படும். கூட்ட நெரிசலைச் சமாளிக்க ரயில்வே நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்து உள்ளது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் 18 பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவை. பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும் என்று தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஐதராபாத் காச்சிகூடாவில் இருந்து குண்டூருக்கும் திருப்பதிக்கும் ஏற்கனவே 'டபுள் டக்கர்' ரெயில் சேவை விடப்பட்டு வாரத்திற்கு இரண்டு நாள் அந்த ரயில் இயங்கி வருகிறது. படம்: இந்தியத் தகவல் சாதனம்
விசாகப்பட்டினம் முதல் திருப்பதி வரை அடுக்கு ரயில்
1 mins read
-

