புதுடெல்லி: மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் லாப, நட்டமின்றி உன்னதமான சேவையாகக் கருதி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான நன்கொடை உள்ளிட்ட கட்டணங்களை வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தகுதி அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் கல்வி நிறுவனங்களை நிறுவுவது லாபம் சம்பாதிக்கத்தான் என்ற நோக்கம் தவறானது என்று தெரிவித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பணம் வசூலிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்
1 mins read

