புதுடெல்லி: வருமானத்தை மிஞ்சிய அளவு சொத்து வாங்கிக் குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை. இந்த மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் மே 14ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு ஜூலை மாதம்தான் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ100 கோடி அபராதம் விதித்தார் பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு 20 நாட்களாக விசாரிக்கப்பட்டது. கோடைகால விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஆகையால் ஜூலை முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தேர்தலுக்குப் பிறகு தீர்ப்பு
1 mins read
-

