“விஜயகாந்துக்கு பேசக்கூடத் தெரியாது”

புதுக்கோட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறரிடம் எப்படிப் பேசுவது என்பது கூட தெரியாது என நடிகர் சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான அவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற் கொண்டார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெய லலிதா தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “திமுக தலைவர் கருணாநிதி, நூறு ஆண்டு காலம் வாழ வேண் டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். ஆனால், அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை விரும்ப வில்லை. ஏனென்றால், கருணா நிதி தொடர்ந்து முதல்வர் வேட்பா ளராக நிற்பதால் தம்மால் ஒரு முறை கூட முதல்வராக முடியவில்லை என்ற கோபம் ஸ்டாலினுக்கு உள்ளது,” என்றார் சரத்குமார்.

இம்முறை திமுகவில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா அல் லது அவரது மகன் மு.க.ஸ்டா லினா? என்ற குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இப்படியொரு குழப்பம் இருப்பது வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க திமுகவினர் படாதபாடு படுவதாகக் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்