இலவசங்களை வாங்கிப் பழகிய வாக்காளர்கள்

இலவசங்களை வாங்கிப் பழகிய வாக்காளர்கள்

1 mins read
161424d8-7f0a-4eee-b193-0797fd5b6c9e
-

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அறிவிக்கப் பட்டுள்ள இலவசங்கள் அயர் லாந்து நாட்டையே அசர வைத்து உள்ளது. அங்கிருந்து வெளிவரும் 'The Irish Times' நாளிதழ் அதிமுக வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கைபேசி உள்ளிட்ட இலவசங்களைப் பெரிதாக சுட்டிக் காட்டியுள்ளது. இதுபோல இலவசங்களை அள்ளித்தரும் அரசியல் கட்சி அயர்லாந்தில் உண்டா என்று அது வினவியுள்ளது.

இலவசங்களைத் தருவதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பது நேர்மையான, சுதந்திரமான வாக்குப் பதிவின் ஆணிவேரையே அறுத்துவிடும் என்று கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. ஆனால், அதற்குப் பின்னரும் தமிழகத்தில் இலவசங்கள் தரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அரசாங்கம் இதுபோல இல வசங்களுக்குச் செலவிட்டால் ஒரு கட்டத்தில் அந்த அரசாங்கமே திவாலாகிவிடும் நிலை ஏற்படலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சுப்பிரமணியம் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட இலவசப் பொருட்களை வாங்கிச் செல்லும் மக்கள். கோப்புப்படம்: ஊடகம்