முதலமைச்சர் வீட்டில் சோதனை

முதலமைச்சர் வீட்டில் சோதனை

1 mins read

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் பணமும் பரிசுப் பொருட்களும் கதிர்காமம் பகுதியிலுள்ள முதல்வர் ரங்கசாமி யின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் 5 வாகனங்களில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்குள் சென்று சோதனை நடத் தினர். சுமார் 10 நிமிடம் சோதனை நடத்தியும் எதனையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.