தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை விடுவித்தது

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை விடுவித்தது

1 mins read

சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேன பிறப்பித்துள்ளார். ராமேசுவரம் மீனவர்களை கடந்த ஏப்ரல் 4, 27ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனவிடம் மீனவர்களை விடுவிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதை அதிபர் சிறிசேன ஏற்றுக்கொண்டதையடுத்து, மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். ஓரிரு நாட்களில் மீனவர்கள் தமிழகம் திரும்ப உள்ளனர்.