ஏமாற்றி திருமணம் செய்த மலேசிய இளையர் கைது

1 mins read

திருச்சி: திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் பேரில் மலேசிய இளை யர் திருச்சி விமான நிலை யத்தில் கைதானார். மலேசியாவைச் சேர்ந்த 36 வயதான மகேஸ்வரன் என்ற அந்த இளையர் சில ஆண்டு களுக்கு முன்னர் சென்னை வந்துள்ளார். அச்சமயம் தியாக ராய நகரைச் சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். பிறகு மனைவியை மலேசியா அழைத்துச் செல்ல உரிய ஏற்பாடுகளைச் செய்வ தாகக் கூறிய அவர், மலேசியா திரும்பியதுடன் அப்பெண்ணை தொடர்புகொள்ளவே இல்லை எனக் கூறப்படுகிறது.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், சென்னை காவல்துறையில் கணவர் மகேஸ்வரன் மீது புகார் அளித்தார். இதையடுத்து மகேஸ்வரன் காவல்துறையால் தேடப்படும் நபராக அறிவிக்கப் பட்டார். அவரது கடப்பிதழ் குறித்த விவரங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங் களுக்கும் அனுப்பப்பட்டு, வழக்கில் தேடப்படுபவர் என்பது பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்துள் ளார் மகேஸ்வரன். அவரது கடப்பிதழை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் போலிசாரால் தேடப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர் திருச்சி விமான நிலைய போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.