பழனி: மக்களுக்கு சேவை செய்வதே தனக்கு விருப்ப மான பணி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதற்காக விரைவில் புதிய இயக்கம் தொடங்க இருப்பதாக பழனி யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். "அமைதி யாக வாழ ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளேன். கீதையை நம்புகி றேன். வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட நினைக்கிறேன். இதனால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கவில்லை. இத்தேர்தலில் மூன்றாவது அணி பரிதாபத் திற்கு உரியதாகிவிட்டது. புதிய இயக்கத்திற்கு பழனியிலேயே பிள்ளையார் சுழி போடப்படும்," என்றார் டி.ராஜேந்தர்.
புதிய இயக்கம்: டி.ராஜேந்தர் தகவல்
1 mins read
-

