80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 80 வயது முதியவர் மீட்பு

1 mins read

புதுக்கோட்டை: 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதிய வர் உயிருடன் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் மேற்கு கிரா மத்தைச் சேர்ந்த 80 வயதான மெய்யப்பன் நேற்று முன்தினம் காலை திடீரென மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத் தாரும் உறவினர்களும் கிராமம் முழுவதும் அவரைத் தேடினர்.

இம்முயற்சி பலன் அளிக்காத நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து முனகல் சத்தம் வெளிப்பட்டது. இதையடுத்து மெய்யப்பனின் உறவினர்கள் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி முதியவரை பத்திரமாக மீட்டனர்.

கிணறு வற்றிக் கிடந்ததாலும், செடி கொடிகள், தென்னை மட்டைகள் இருந்ததாலும், மெய்யப்பன் அதிக காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.