ஒரே இரவில் 502 பேர் தடுத்து வைப்பு

ஒரே இரவில் 502 பேர் தடுத்து வைப்பு

1 mins read

சென்னை: காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரே இரவில் 502 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டனர். இது சென்னை நகர மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

குற்றச் செயல்களை தடுக்கவும் குறைக்கவும் சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் இரவு நேரங்களில் மாநகரின் பல பகுதி களில் வாகன சோதனை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை யன்று இரவும் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது 502 பேர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்தனர். இவர்களில் 4 பேருக்கு குற்றச் செயல்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

"இந்தச் சோதனை நடவடிக்கை யின் போது மது அருந்திவிட்டு வாகனங்களில் சென்ற 61 பேர் பிடிபட்டனர். குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள், முன்னாள் குற்றவாளிகள், தேடப்படும் குற்ற வாளிகள் உள்ளிட்ட சமூக விரோதிகளை பிடிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

"அந்தந்த பகுதி காவல்நிலையங்களைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்துக்குரிய தங்குவிடுதிகளிலும் சோதனை நடத்துகின்றனர். இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது," என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.