ஹைதராபாத்தில் போலியோ கிருமி

ஹைதராபாத்தில் போலியோ கிருமி

1 mins read

இந்தியாவில் கடந்த 5 ஆண்டு­களாக துடைத்தொழிக்கப்பட்ட 'போலியோ' கிருமி இப்போது ஹைதராபாத்தில் மீண்டும் தலை­தூக்கியுள்ளதற்கான அடை யாளம் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. அங்குள்ள கழிவுநீர்க் கால்வாய் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் சோதிக் கப்பட்டதில் இது தெரிய வந்தது. தெலுங்கானா அரசு இதனை உலக சுகாதாரத்திற்கு ஏற் பட்டுள்ள அவசரநிலை என வகைப்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள 300,000 குழந்தை­களைப் பாதுகாக்க தெலுங்கானா மாநில அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெனிவா­வில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்து களை தெலுங்கானா தருவிக்கவுள்­ளது.

ஹைதராபாத்தில் உள்ள 'ஆம்பர்பேட்' கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி கழிவுநீரை சோதித்துப் பார்க்கையில் போலியோ கிருமி இருப்பது தெரியவந்தது. ஹைதராபாத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட 30 'மாதிரி கழிவுநீர்' சோத னைக்கு உட்படுத்தப்பட்டன. கிருமித் தடுப்பு நடவடிக்­கையின் ஒரு பகுதியாக தெலுங்கானா அரசு மாபெரும் தடுப்பு மருந்து திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள் ளது. போலியோ கிருமி பற்றி மக்கள் நன்கு அறிந்துகொண்டு அதன் தாக்கத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள் ளும் வகையில் அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு முகாம் களை நடத்தத் திட்ட­மிட்டுள்ள­ ­தாக தெலுங்கானா சுகாதாரத் துறை தலைமைச் செயலர் திவாரி கூறினார்.