நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னை சென்ற ஆம்னி பேருந்தை நாகூர் சோதனைச் சாவடியில் நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பேருந்திலிருந்த ஒரு பையில் பத்து கிலோ தங்கம் இருந்தது. சுங்க இலாகா அதி காரிகள் தொடர்ந்து சோதனையிட் டதில் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தியது தொடர்பில் 2 பேரை விசாரணைக் காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தங்கம் கடத்தியது யார், எதற்காகக் கடத்தப்பட்டது, என்பது குறித்து காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.
பேருந்தில் 10 கிலோ தங்கம்
1 mins read

