நெல்லை: சாதிச் சான்றிதழ் வழங்க 100 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் துணை தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற ஜெயலட்சுமி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவ லகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றியவர். கடந்த 2006ஆம் ஆண்டு அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்ற நீதிபதி ஜெயசிங், ஜெய லட்சுமிக்கு 2 குற்றப்பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை விதித்தார். முன்னதாக, அம்பாசமுத்தி ரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது, அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார் ஜெயலட்சுமி. லஞ்ச ஒழிப்பு போலிசாரின் ஏற்பாட்டின் கீழ் சுரேஷ் லஞ்சம் கொடுக்க, அதை ஜெயலட்சுமி பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
நூறு ரூபாய் லஞ்சம்: பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
1 mins read