வேலூர்: சாராய விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் வேலூரில் பரபரப்பு நிலவி யது. இங்குள்ள அணைக்கட்டை அடுத்த கரடிகுடி, சென்றாயன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிக ளில் சாராயம் விற்பனை செய்யப் படுகிறது. நந்தகோபால் என்பவரே சாராயம் காய்ச்சுகிறார் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள், சாராய விற்பனையை நிறுத்து மாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இரு நாட்க ளுக்கு முன்னர் சாராயம் குடித்த சிலர், போதையில் பெண் களைக் கேலி செய்துள்ளனர். இதையடுத்து போதை கும்பலுக் கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் மூண்டதில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் வேலூர்-ஒடுகத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாராய வியாபாரியை கைது செய்து, சாராய விற்பனையை தடுப்ப தாக உறுதியளித்த பின்னரே மறியல் கைவிடப்பட்டது.

