இலங்கையின் சூழ்ச்சிக்கு இந்தியா பலியாகிவிட்டது: நெடுமாறன் புகார்

இலங்கையின் சூழ்ச்சிக்கு இந்தியா பலியாகிவிட்டது: நெடுமாறன் புகார்

1 mins read
09f8401a-786f-4ac9-8ef3-692a4509d8b4
-

சென்னை: கடந்த 1975ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி மேற்கொண்டதாக பழ.நெடுமாறன் குற்றம்சாட்டி உள்ளார். அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது காவல்படை தாக்குதல் நடத்தவும், அதில் 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் துரையப்பாவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். "தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரை இலங்கை அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடியைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. இலங்கை அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கது," என நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளார்.