இலங்கை சென்ற திருவள்ளுவர் சிலைகள்

இலங்கை சென்ற திருவள்ளுவர் சிலைகள்

1 mins read
04852dde-52ca-450a-a8d5-76029ffde29e
-

சென்னை: இலங்கையில் 16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவ விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாவகச்சேரி, கிளி நொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, மாத்தளை, கல்முனை, கம்பகா, நாவலப்பிட்டி, தெரணியகல், அட்டன், பண்டார வளை, இறக்வானை ஆகிய இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற் காக, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இலங்கைக்கு அச் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. "இந்தியா, இலங்கை இடையேயான நட்புறவு பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த உறவு மேலும் வலுவடையும் வகை யில், சிலைகளை அனுப்புகிறோம். இதன் மூலம் உலகப் பொதுமறை யாம் திருக்குறளின் அருமையும் பெருமையும் உயர்ந்தோங்கும்," என தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்தார். படம்: சதீஷ்