தவறான விவரங்களுடன் தமிழக அரசு இணையத்தளம்

தவறான விவரங்களுடன் தமிழக அரசு இணையத்தளம்

1 mins read

சென்னை: முதல்வர் ஜெய லலிதா தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதமாகிவிட்டபோதிலும், தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இன்னும் இடம்பெறவில்லை. குறிப்பாக அமைச்சரவை யில் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் புகைப் படங்கள், எம்எல்ஏக்கள் குறித்த விவரங்கள் முழு மையாக இல்லை. அரசின் இணையத்தளத் தில் மாநில ஆளுநர், முதல் வர், அமைச்சர்கள், நாடாளு மன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்கள், விவரங்கள் இடம்பெற்றுள் ளன. மேலும் அரசுத் துறை கள் வழங்கும் சேவைகள், அவற்றுக்கான படிவங்கள், அரசின் முக்கிய அறிவிப்பு கள், அரசாணைகள் எனப் பல்வேறு விஷயங்கள் காணப்படும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமாகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் கருப்பண் ணன், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரது படங்கள் இது வரை அரசு இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வான சீனிவேல் பதவி யேற்கும் முன்பே உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். ஆனால் இணையத் தளத்தில் எம்எல்ஏக்கள் பட்டியலில் அவரது பெயரும் உள்ளது. இணையத்தளத் தில் உள்ள விவரங்களைச் சரிபார்க்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.