69 மணி நேரம் யோகா: கின்னஸ் சாதனை

69 மணி நேரம் யோகா: கின்னஸ் சாதனை

1 mins read

சென்னை: திருப்பூர் மாவட்டம், ராகல்பாவி பகுதியைச் சேர்ந்த 45 வயது யோகா ஆசிரியரான குணசேகரன் 69 மணிநேர தொடர் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு யோகாசனம் கற்பித்துப் பல விருதுகளை பெற்றுள்ள இவர், அனைத்துலக யோகா தினத்தையொட்டி கின்னஸ் உலக சாதனை முயற்சியாக பொள்ளாச்சி, கே.கே.ஜி. மண்டபத்தில் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் யோகா செய்யத் தொடங்கினார்.

கின்னஸ் விதிமுறைகளின்படி ஒருமணி நேரத்திற்கு 5 நிமிடம் இடைவெளிவிட்டுப் பலவகையான யோகாசனத்தை செய்து காண்பித்து வந்தார். கடந்த நான்கு நாட்களாக சுமார் 240 வகையான ஆசனங்களைச் செய்து அசத்திய அவர், நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் தனது 69 மணிநேர தொடர் யோகாசனத்தை நிறைவு செய்தார். இந்த சாதனை தொடர்பான புகைப்படங்கள், காணொளி பதிவுகள் கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படும் என குணசேகர் தெரிவித்தார்.