'டாட்டா' குழுமத்திற்கு 7 மணி நேரத்தில் ஏராளமான இழப்பு

'டாட்டா' குழுமத்திற்கு 7 மணி நேரத்தில் ஏராளமான இழப்பு

1 mins read

மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியான நிலையில் பிரிட்டன் மண்ணில் அதிகளவில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவனப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டாட்டா குழுமம் வெள்ளிக்கிழமை பல கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் சந்தையில் அதிக வேலை வாய்ப்பை அளித் திருக்கும் பன்னாட்டு நிறுவனங்க ளிலும் டாட்டா குழுமம் முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாட்டா குழுமம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், வெள்ளிக் கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1050 புள்ளிகள் வரை சரிந்து மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இந்த வர்த்தகச் சரிவில் இந்திய சந்தையில் இருக்கும் முக்கியமான அனைத்து நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்தது. இதில் முக்கியமாகப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பெரும் அளவு பாதித்தன. இதில் டாட்டா குழுமமும் ஒன்று.