வினோதினி வழக்கு: ஆயுள் உறுதி

வினோதினி வழக்கு: ஆயுள் உறுதி

1 mins read

சென்னை: பொறியியல் மாணவி வினோதினி மீது அமிலம் வீசப்பட்ட வழக்கில், குற்றவாளி சுரே‌ஷின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு காரைக்கால் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வினோதினி மீது அமிலம் வீசப்பட்டதில், அவர் பார்வையிழந்து, பின்னர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் சுரே‌ஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.