கங்கை நதியோரம் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு; மாளிகையில் திறப்பு

கங்கை நதியோரம் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு; மாளிகையில் திறப்பு

1 mins read
ad9688b5-fb87-45da-8b41-0a98637c0a82
-

உத்தரப்பிரதேச மாநிலம், கங்கை நதிக்கரையோரம் உள்ள அரிக்கபேடி என்ற இடத்தில் திருக்குறள், திருவள்ளுவரை வடமாநில மக்களும் அறிந்துகொள்ளும்படி 12 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் கூறியிருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை நேற்று காலை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ராம்நாயக் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் நாமக்கல்லில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டது. 20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாட்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர். 12 அடி உயரம் உள்ள இந்தச் சிலையின் எடை 4.50 டன் ஆகும். படம்: ஊடகம்