தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

1 mins read

திருப்பதி: பெங்களூரு, ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் தாக்கு­தல் மேற்­கொள்ள பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ள­து விசா­ரணையில் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலை அரங்கேற்ற மூன்று பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்­படுகிறது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், ஐஎஸ் பயங்­கரவாத அமைப்புடன் தொடர்­புடைய ஒரு அமைப்பைச் சேர்ந்த 11 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவான என்ஐஏ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், கைத்தொலைபேசிகள், சிம் கார்டுகள், கையடக்கக் கணினி­கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்­ளன.

இந்திய புலனாய்வுத்துறை இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த அமைப்புக்கு வெளிநாடு­களில் இருந்து உண்டியல் பணம் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும் அந்தப் பணத்தை வைத்து இவர்கள் ஆயுதங்களை வாங்கிச் சேர்த்துள்ளதாகவும் இந்­திய புலனாய்­வுத்துறை வட்டா­ரம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் வெடி­குண்டு தயார் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.