எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர்கள் நெருக்குதல்

எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர்கள் நெருக்குதல்

1 mins read

பெங்க­ளூரு: "உடுப்பி = சிக்­மங்க­ளூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஷோபா சொல்­கிற­ப­டி­தான் எடி­யூ­ரப்பா நடந்­து­கொள்­கிறார். மாவட்­டத் தலை­வர்­கள் நிய­ம­னத்­தில் தன்­னிச்சை­யாக நடந்துகொள்­கிறார்," என்று மூத்த தலை­வர்­கள் போர்க்­கொடி தூக்கி உள்­ள­னர். மேலவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான ஈஸ்­வ­ரப்பா தலைமை­யில் அதி­ருப்­தி­யா­ளர்­கள் சந்­தித்து ஆலோ­சனை நடத்தி­ உள்­ள­னர். இதில் பங்­கேற்ற கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் பலர், எடி­யூ­ரப்­பா­வுக்கு எதி­ராக கடும் புகார்­களைக் கூறி­யுள்­ள­னர். ஆர்எஸ்எஸ் அமைப்பும் எடியூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. அமித் ஷாவை சந்தித்து எடியூரப்பா பற்றி புகார் அளிக்க கர்நாடக பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.