வாராங்கல் மாவட்டத்தைப் பிரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வாராங்கல் மாவட்டத்தைப் பிரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநி லத்தில் உள்ள வாராங்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் அரசு பேருந்து ஒன்றும் காவல் துறை வாகனங்கள் இரண்டும் எரிக்கப்பட்டன. தெலுங்கானாவில் 10 மாவட்டங்களைப் பிரிக்க அம் மாநில அரசு முடிவு செய்துள் ளது. இதனிடையே வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஜனகாமா பகுதியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜனகாமா ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஊடகம்