சிவகாசி: பட்டாசு கடை, கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் உடல் கருகி பலியாகினர். நேற்று முன்தினம் சிவகாசியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான இக்கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அருகே உள்ள எண்ணெய் கடை, தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்கும் தீ பரவியது. இதனால் அம்மையத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாகின. பட்டாசு கிடங்கிலும தீ பரவி அங்கிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறியதில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
பட்டாசு கடை தீ விபத்து: 2 பேர் பலி
1 mins read

