`570 கோடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

`570 கோடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

2 mins read
9c6e219e-c367-44af-ba49-c66731a0c5f8
-

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் முறையான ஆவணங் களும் பாதுகாப்பும் இல்லாமல் மூன்று கொள்கலன்களில் 570 கோடி ரூபாய் கொண்டு செல்லப் பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற அந்தக் கொள்கலன்களை கடந்த மே 13ஆம் தேதி திருப்பூர் அருகே அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

அந்தப் பணம் யாருடையது என்று பல மணி நேரமாக யாரும் உரிமை கோராத நிலையில், சுமார் 18 மணி நேரத்திற்குப் பின் அது தனக்குரியது என்று பாரத ஸ்டேட் வங்கி உரிமை கோரியது. அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கியும் அந்தப் பணம் பாரத ஸ்டேட் வங்கியினுடையதுதான் என்று விளக்கமளித்தது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமனெ திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

ஆனால், சிபிஐ விசாரிக்க வேண்டிய அளவுக்கு இந்த வழக் கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பணம் ஹவாலா பண மாக இருக்கலாம் என்ற சந்தே கம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தாகவும் இதில் ரிசர்வ் வங்கி, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டாகச் சதி செய்துள்ளனர் என்றும் சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் திமுக சார்பில் முன் னிலையான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

முன்னதாக, ஸ்டேட் வங்கி காலந்தாழ்த்தி உரிமை கோரிய தால் அதில் சந்தேகம் நிலவு வதாகக் கூறி, அந்தப் பணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி 570 கோடி ரூபாய் பணம் ஏற்றிச் சென்ற மூன்று கொள்கலன்கள். கோப்புப் படம்