சேலம்: சேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 19 வயதான நிஷாந்தினிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதனால் அவரது காதலர் சந்திரசேகர் ஆத்திர மடைந்தார். நேற்று முன்தினம் நிஷாந்தினியைச் சந்தித்த அவர், தனியே பேசலாம் என்று கூறி அழைத்துச்சென்று, பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிஷாந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அவனிடம் இருந்து தப்பித்து ஓடிவந்த நிஷாந்தினியை அப்பகுதி மக்கள் மீட்டனர். சந்திரசேகரன் கைதானார்.
புதுமணப் பெண்ணை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காதலர் கைது
1 mins read

