சென்னை: தனியார் காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகள் கடத் தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தாம்பரத்தில் இயங்கி வந்த அந்தக் காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லா ததால் அண்மையில் மூடப்பட்டது. அங்கிருந்து 32 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் அங்கு 41 குழந்தைகள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 சிறுவர்கள், 2 சிறுமிகளின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 சிறுவர்கள் கடத்தல் எனப் புகார்
1 mins read

