தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ.42 கோடியைத் திருப்பித்தர மறுப்பு

தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ.42 கோடியைத் திருப்பித்தர மறுப்பு

1 mins read

சென்னை: சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பறிமுதல் செய்த 42 கோடி ரூபாயைத் திருப்பித் தர வருமான வரித்துறை மறுத்துள்ளது. அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது வருமான வரித் துறையினர் எப்போதும் இல்லாத வகையில் தீவிர சோதனை மேற் கொண்டனர். அதில் 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். அதிமுக பிரமுகர் உட்பட மொத்தம் 24 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட் டது. பணம் எப்படி வந்தது என்பதற்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்துள் ளது. அதனால், பறிமுதல் செய்த 42 கோடி ரூபாய் பணத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியைப் பிடித்தம் செய்யவிருப்பதாக வருமான வரித்துறையினர் கூறினர்.