தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்து: சென்னையில் பரபரப்பு

1 mins read

சென்னை: தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து ஏற் பட்ட விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் அந்த விமானத்தில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பெங்களூருவில் இருந்து சென்னை வந்த தனியார் விமானம் தரையிறங்கும்போது அதன் முன்சக்கரம் உடைந்தது. சென்னையில் பலத்த காற்று வீசியதால் விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.2016-07-08 06:00:00 +0800