சென்னை: சுவாதியை ராம்குமார் கொல்லவில்லை என்று அவனுடைய தந்தை பரமசிவன் தெரிவித்துள்ளார். "எனது மகன் ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் சிறப்பு வகுப்பில் சேர சென்னைக்குச் சென்றான். "இந்த நிலையில் சில நாட் களுக்குப் பின் திரும்பிய அவன், செலவுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டான். அப்போதுதான் நள்ளிரவில் காவல்துறையினர் வந்து 'ராம்குமார், ராம்குமார்' என்று கூப்பிட்டனர். "சத்தம் கேட்டு எனது மகன் தான் கதவைத் திறந்தார்.
திடீர் என்று வெளியே காவல்துறையினர் நின்றுகொண்டு உங்கள் மகன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று கூறினர். "இதனைப் பார்த்த நான் மயக்கம் அடைந்து விட்டேன். ராம்குமார், அவனாகவே கழுத்தை அறுத்துக் கொள்ள வில்லை. காவல்துறையினர்தான் எனது மகனின் கழுத்தை அறுத்துவிட்டனர். "இந்த வழக்கை பொறுத்த வரை நீதிமன்றம் நெருக்கடி கொடுத்த காரணத்தாலேயே காவல்துறையினர் அவசரம் அவ சரமாக செயல்பட்டு எனது மகன்தான் குற்றவாளி என்று தவறாக அடையாளம் காட்டி உள்ளனர். "ஒன்றும் அறியாத அப்பாவி யான ராம்குமாரை தேவையில் லாமல் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். எனவே சட்டபூர்வமாக நீதிமன்றத்தை அணுகி எனது மகன் நிரபராதி என்பதை நிரூபிப்போம்," என்று ராம்குமாரின் தந்தை திரு பரம சிவன் தெரிவித்தார்.

