ரணில் விக்ரமசிங்க: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது

ரணில் விக்ரமசிங்க: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது

1 mins read
cd0750c8-ac7a-4fbc-9752-57fb36b94017
-

கொழும்பு: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்து வருகிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க (படம்), தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று எதிர்க்கட்சிக் கொறடாவான அனுராகுமார திசநாயகே, இலங் கைக் கடற்பகுதியில் வாரத்தில் சில நாட்களுக்கு அல்லது இலங் கைக் கடற்பரப்பில் குறிப்பிட்ட எல்லை வரை தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பது குறித்துப் பரிசீலனை நடைபெறு கிறதா என்று கேள்வி எழுப் பினார். இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அளித்தார். "இலங்கைக் கடல் பகுதியில் சுமார் 1,000 தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன் படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இது மீன் வளத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்துப் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, சுருக்குமடி வலைக்குத் தடை விதிப்பதுதான் பிரதான நோக்கம். நமது மீன்வளம் கொள்ளையடிக்கப்படுவதை அனு மதிக்க முடியாது," என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.