மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி

மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி

1 mins read

போபால்: மத்­தி­யப் பிர­தே­சம் மாநி­லத்­தின் பல மாவட்­டங் களில் கடந்த 48 மணி நேர­ம் தொடர்ந்து பெய்­து­ வ­ரும் கன­மழை­யால் ரேவா மற்­றும் சட்னா மாவட்­டங்களின் பல பகு­தி­கள் வெள்­ளக்­கா­டாகக் காட்­சி­ய­ளிக்­கின்றன. குறிப்­பாக சட்னா மாவட்­டத்­தில் கடந்த 24 மணி­நே­ரத்­தில் 9 அங்­கு­லத்­துக்­கும் அதி­க­மான மழை பெய்­த­தால் இங்­குள்ள பல கிரா­மங்கள் துண்­டிக்­கப்­பட்டு வெள்­ள­நீ­ரில் தீவு­களைப்­போல் காணப்­படு­கின்றன. இங்­குள்ள ரேவா, சட்னா, ஹோசங்கா­பாத், ஜபல்­பூர், ரெய்­சன், சாகர், டமோ, போபால், நர­சிங்­பூர், விடிஷா, பெட்டல் ஆகிய மாவட்­டங்களில் அடுத்த 24 மணி­நே­ரத்­துக்­குக் கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.