கேரள மாநிலத்தவர் 16 பேர் மாயம்

கேரள மாநிலத்தவர் 16 பேர் மாயம்

1 mins read
f0f2dc8a-8e56-4cae-8ffc-14e403a2dd0f
-

பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மாயமாகி இருப்பதால் அவர்கள் சிரியா, ஈராக் நாடு களுக்குச் சென்று ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்திருக் கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. காணாமல் போன சிலரிடம் இருந்து ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் அச்சம் தரும் வகையிலும் அவர்களின் உறவினர்களுக்கு வந்த குறுஞ்செய்திகளைப் பார்க்கும்போது அந்தச் சந்தே கம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

'இறுதி இலக்கை வந்த டைந்துவிட்டோம்', 'நரகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு வந்து விட்டோம்', 'இஸ்லாமிய தேசத் திற்கு வந்துவிட்டோம்' என்பது போன்ற குறுஞ்செய்திகளை அவர்கள் தங்களுடைய உற வினர்களுக்கு அனுப்பி இருக் கின்றனர். காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரையும் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து நால்வ ரையும் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை என்று தகவல் கள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அதனால் அவர்கள் சிரியா அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் முகாம்களுக்குச் சென்றிருக்கலாம் என்று அவர் களின் உறவினர்கள் அஞ்சு கின்றனர். அவர்களில் ஐவர் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றுள் ளனர்.