ரகசிய இடத்தில் பத்திரமாக 'பத்ரா'

ரகசிய இடத்தில் பத்திரமாக 'பத்ரா'

1 mins read
ee915302-1143-43ca-b8ff-e49c8b1e0831
-

சென்னை: நான்காவது மாடி யிலிருந்து வீசி எறியப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய 'பத்ரா' என்று பெயரிடப்பட்ட பெண் நாய் (படம்) நேற்று முன்தினம் இரவு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை குன்றத்தூர் மருத்துவக் கல்லுரியின் நான் காவது மாடியிலிருந்து வீசி எறியப்பட்டதில் காயமடைந்த அந்நாயை விலங்கு நல ஆர்வலர் ஆண்ட்ரூ ரூபின் என்பவர் மீட்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பத்ராவை புகைப்படம் எடுக்க வும் பார்ப்பதற்காகவும் ஏராள மானோர் வருகின்றனர்.

அதனால் இடைஞ்சலாக இருக் கிறது. அதன் வலது காலில் ஏற்பட்ட காயம் வேகமாக ஆற வேண்டுமெனில் அதன் நடமாட் டத்தைக் குறைக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனவே, பத்ராவை ரகசிய இடத்தில் கூண்டில் வைத்துப் பராமரித்து வருகிறோம். "திரை நட்சத்திரங்கள் லாரன்ஸ், கவுதம் கார்த்திக், சித்தார்த், திரிஷா, குஷ்பு, பாடகி சின்மயி போன்றோர் அந்த நாயை வளர்ப்பதற்காகக் கேட்டனர். ஆனால், அது குணமடைவதுதான் இப்போது முக்கியம். எனவே, யாருக்கும் அதனைத் தத்து தரும் எண்ணம் இல்லை," என்றார்.