கீழே விழாமல் தடுக்க விழிப்புணர்வு இயக்கம்

கீழே விழாமல் தடுக்க விழிப்புணர்வு இயக்கம்

2 mins read

வில்சன் சைலஸ்

கால் தடுக்கி அல்லது கால் வழுக்கி கீழே விழுதல் குறித்த விழிப்புணர்வை முதியோரிடையே அதிகரித்து, அதைத் தடுப்பதற் கான வழிமுறைகளை அவர்களின் பராமரிப்பாளர்களுக்குக் கற்பிக்க விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை சுகாதார மேம்பாட்டு வாரியம் அறி முகப்படுத்தியுள்ளது. முதியோருக்குக் காயங்கள் ஏற்பட கீழே விழுவது பொதுவான காரணமாக அமைவதுடன் இடுப் பெலும்பு முறிவு போன்ற விளைவு களால் அவர்களில் சிலர் நடமாட முடியாமலும் போய்விடுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் ஆண்டிற்குச் சுமார் 8,000 பேர் என்ற அளவில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கீழே விழுந்ததால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பேரதிர்ச்சி காரணமாக 2013ஆம் ஆண்டில் நிகழ்ந்த மரணங்களில் சுமார் 60% கீழே விழுந்ததால் ஏற்பட்டவை என்றும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதைத் தாண்டியோர் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கீழே விழுவதைத் தடுப்பதற் கான விழிப்புணர்வு பிரசாரத்தின் ஓர் அம்சமாக அலெக்சாண்ட்ரா சுகாதார அமைப்புடன் இணைந்து சுகாதார மேம்பாட்டு வாரியம் பரா மரிப்பாளர்களுக்குப் பிரத்தியேக வழிகாட்டிக் கையேடு ஒன்றைத் தயாரித்துள்ளது. கீழே விழும் மூத்தோர் என்ன செய்யவேண்டும், பராமரிப்பாளர்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் போன்ற தகவல்களுடன் எளிய வழிமுறைகளும் படங்களும் கொண்ட மற்றொரு கையேடும் உருவாக்கப்பட்டுள்ளது. "உடலளவிலும் மனதளவிலும் வெற்றிகரமாக மூப்படைய வேண் டும். எளிய வழிமுறைகளின் மூலம் கீழே விழுவதைத் தடுக்க லாம் என்பதை உணர்த்துவதே இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம்," என்றார் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர்.